Sunday, October 28, 2012

எது பெண்ணுரிமை இல்லை?



இதை நான் எழுதுவதிற்கான காரணம், ஸ்டார் விஜயில் நடந்த நீயா? நானா? விவாதம் தான்!

விவாதத்தின் தலைப்பு "பெண்களின் உடை அவர்கள் மீதான வன்முறைக்கு காரணமா?"

அதில் பேசிய பல சகோதரர்கள், ஒரு பெண் நாகரீக உடை அணியும் பொழுது எங்களுக்கு பாராட்ட/கிண்டலடிக்க தோணுகின்றது என்றனர்! கண்டிப்பாய் இந்த காலகட்டத்தில் ஒரு முழுவதும் போர்த்திக்கொண்டு சென்றாலும், கண்டிப்பாய் அவள் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றாள்! கண்டிப்ப்பாய் இது ஆண்களின் தவறு தான்! அப்படி கிண்டலடிக்கும் எந்த ஆண் மகனும் தன் தாயையோ, சகோதரியையோ,காதலியையோ வேறொருவன் கிண்டளித்தால் பொறுத்துகொல்லமாட்டான்! அப்படியிருக்கையில் ஆண்கள், கண்டிப்பாய் இரட்டை நிலை கொண்டிருக்கின்றனர், என்பது ஒரு சக ஆணாய் நான் ஒற்றுக்கொள்ள வேண்டிய உண்மை, கவலைப்பட வேண்டியது, திருத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள வேண்டியது!

அதே நேரத்தில், ஒரு மென்மையான பாராட்டை, அழகை புகழும் விமர்சனத்தை பெண்கள், இளைஞிகள் ரசிக்கின்றனர் என்பதும் உண்மை!

இதற்கும் இக்கட்டுரையின் தலைப்பிற்கும், என்ன சம்பந்தம்? இந்த விவாதத்தில் பங்குகொண்ட பல சகோக்களும், உடையணிவது எங்கள் சுதந்திரம் என்றே கூறினர்! கண்டிப்பாய் ஏற்றுக்கொள்கிறேன் அது உங்கள் சுதந்திரம் தான், ஆனால் சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் குறித்து ஓர் ஆங்கில தத்துவயியலாளர் கூறுகிறார், "எது கட்டுபாடுடன் இருக்கிறதோ, அதுவே சுதந்திரம்" என்று! எவ்வளவு நிதர்சனமான விளக்கம்!

இன்றைய இளைஞிகள் பலரை பார்கின்றேன் குறிப்பாய் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும், தைரியத்தில் பெண்களின் நிலை பெரிதாக மாற்றம் ஏற்பட்டிருகின்றது! இன்று அவர்கள் பெரிதாய் படித்திருக்கின்றனர், கைநிறைய சம்பாதிக்கின்றனர், நல்ல முன்னேற்றம்!! அனால் அதே முன்னேற்றம் அவர்கள் சிந்தனையில் சின்னதொரு தவறான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது, -மேற்கத்திய உடை கலாசார ஏற்பு!

சகோக்களே, மேற்கத்திய பெண்களின் உடையான ஜீன்ஸ் அணிகின்றீர்கள், உங்களுக்கு நடப்பதற்கும் ஓடுவதற்கும் இலகுவாக இருக்கின்றது, வேலை நிமித்தமாய் ஷர்ட் பேண்ட் அணிகின்றீர்கள், கண்டிப்பாய் இது உங்கள் சுதந்திரம் தான்! ஆனால் டி-ஷர்ட்-உம் லக்கின்ஸ்-உம் உங்கள் சுதந்திரம் என்று கூறாதீர்கள், கண்டிப்பாய் உங்களை நீங்களே உடை குறித்த தவறான புரிதலுக்கு உட்படுத்திகொள்கிறீர்கள்!

உடை என்பது மறைபதற்க்கே அன்றி திரை காட்ட அல்ல! உடை உங்கள் பாதுகாப்பிற்கும், வசதிக்குமே அன்றி வேறெதற்கும் அல்ல!

உங்களை ஷர்ட்,ஜீன்ஸ்-க்கு துப்பட்டா அணியுங்கள் என்று சொல்லவில்லை, சுடிதாருக்கு துப்பட்டா அணியுங்கள் என்று தான் சொல்லுகின்றேன்!

நான் புனே-வில் கண்ட ஒரு பெண்ணின் டி-ஷர்ட் முன் பக்க வாசகம், "i am a virgin!!". பின் பக்க வாசகம், "but its my old T-shirt !!"

மனதை தொட்டு சொல்லுங்கள் இதுவா நீங்கள் எதிர்ப்பார்க்கும் சுதந்திரம்! இது போல் பல கண்டிருக்கிறேன்!

விளையாடுவதற்கும், ஆடல் நிகழ்ச்சியில் பங்குபெறுவதர்க்கும் வருகின்ற பெண்கள் பெரும்பாலும், அதற்க்கு உண்டான உடை அணிவதில்லை, இவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், நீங்கள் உங்களை அங்கே காட்சி பொருளாய் ஆக்கிகொண்டிருக்கின்றனர்!

 

பெண்கள் தன்னை ஒருவன் தன உடைகுறித்து கிண்டலடித்தால் கவலை கொள்கிறாள், அதே பெண் மட்டமாய் ஒரு ஆண் உடை அணியும் அவனிடம் அறிவுரையோ சொல்லவோ அல்லது கண்டுகொள்ளாது ஒதுக்குவதோ இல்லை, மாறாய் தன தோழிகளிடத்தில் அதை பற்றி கண்டிப்பாய் கிண்டலடிக்கவே செய்கின்றாள்!

சமுதாயம் என்பது நாம், தான்! முதலில் மாறுபவர்கள், நாமாய் இருப்பின் மாற்றம் வந்தே தீரும்!

இன்னுமொரு வருத்தம், மேற்கத்திய கலாசாரத்தை ஏற்கும் அளவுக்கு உயர்ந்த நீங்கள், ஏற்கக்கூடிய அளவிலான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளகூடிய அளவிற்கு உயரவில்லை!

ஒரு பெண் சகோ பேசுகிறார், அவர்களது அலுவலகத்தில் ஒரு ஆண் உள்ளாடை வெளியே தெரியும் படியாக ஜீன் அணிந்திருந்தான், அவன் இருக்கும் பக்கம் செல்வதே நான் அவமானமாய் கருதினேன் என்று!

இது குறித்து கவிஞர் குட்டி ரேவதியிடம் கேட்ட போது, அவர் கூறிய பதில், "அப்படி உடை அணிவது அவன் விருப்பம், சுதந்திரம் - அதே போல் பெண்கள் உடை அணிவது அவர்கள் சுதந்திரம்" என்று!!

இது எவ்வளவு தூரம் ஏற்கக்கூடிய கருத்து?

இதை மட்டும் தான் அணியவேண்டும் என்றால் அது உங்கள் சுதந்திரத்தில் தலையிடுவது தான், ஆனால் இதை மட்டும் அணியாதீர்கள் என்பது.. எதோ உங்கள் நலனுக்காய் கூறும் யோசனையாய் தான் தெரிகின்றது!

உங்கள் உடை நல்ல ரசனைக்காரனை கவர்வதை இருத்தல் தவறில்லை, காமகொடுரர்களை கவர்வதை இருப்பது, உங்களுக்கு நல்லதா?

நீங்கள் பெற்றடைய வேண்டிய சுதந்திரம் எத்தனையோ இருக்கின்றது மிச்சம்! முதலில், சோப்புக்கும்,செண்டுக்கும், சிப்சுக்கும் விளம்பரப் பொருளாய் வருவதை தடுத்து நிறுத்திடுங்கள்! ஆண் உள்ளாடை விளம்பரத்திற்கும், பெண்ணிற்கும் என்ன சம்பந்தம், நீங்கள் என்ன விளம்பரத்திர்கான காட்சிப்பொருளா?

அலுவலக அதிகாரத்தை பிடிப்பது அல்ல பெண் சுதந்திரம், வீட்டிலும் சரிசம அதிகாரம் பெறுவதே, சுதந்திரம்!

33% ஒதுக்கீடு பெறுவது உங்கள் சுதந்திரம் அல்ல, ஒதுக்கீடு இல்லாமலே சரிபாதி போட்டியிடுவது தான் உங்கள் முழுச்சுதந்திரம்!

நாட்டின் ஜனாதிபதியாய் ஒரு பெண் வந்து விட்டதல்ல சுதந்திரம், எங்கோ ஒரு மூலையில்,குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு அடிபட்டுக்கொண்டும் அடுப்பூதிக்கொண்டும் இருப்பவளும் நிம்மதியாய் இருப்பதே பெண்மைக்கான முழுச்சுதந்திரம்!

பெண்கள் அனைவர்க்கும் சின்னதொரு வேண்டுகோள், ஆணாதிக்கம் என்பது.. இந்திய ஆண்கள் மனதில் ஊறி போன ஒன்று! தயை செய்து உங்கள் மகனிடத்திலிருந்து அதை விலக்கியே வையுங்கள், அதே நேரத்தில் உங்கள் பெண் குழந்தையிடம், பெண் சுதந்திரம் என்றால் என்ன என்பதையும், விளக்கியே வையுங்கள்!

இது என் முதல் கட்டுரை, நீயா?நானா? விவாதம் யூடியுபில் பார்த்தவுடன் எழுத நேர்ந்தது!

எழுத்துப்பிழை இருக்கலாம், கருத்துப்பிழை இருக்க வாய்ப்பில்லை! ஏதேனும் ஆட்சேபனை இருப்பின்...... கண்டிப்பாய் விவாதிக்கலாம்.. உண்மையை இருவரும் உணர்ந்திட!

 

 
~பொன்மாமகன்

Thursday, September 27, 2012

அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!

அவள் அன்பு - அது
எனை கொய்யும் அம்பு!

அவளின் பாசம் - என்னுயிர்
வாழ வைக்கும் சுவாசம்!

இப்படித்தான் கழிகின்றன என் முப்பொழுதும்!
இனி ஏதும் கேட்கப்போவதில்லை எப்பொழுதும்!

தவறு செய்யாதோர் யாருமில்லை - தப்பாக
அதை தொடரவிட்டால் - உறவினில் சாறும் இல்லை!

கோபம் நான் கொண்ட பாபம்!
மெய் புரிந்தாயாயின் -
படுவாய் பரிதாபம்!!

கடந்ததென்னவோ இரு பத்து  ஆண்டுகள்  - காத்துக் -
கிடக்கின்றன பல பத்து ஆண்டுகள்!!

மாற்றம் ஒன்றே மாறாதது - மனதும்
மாறிப்போனால் வடு ஆறாதது!

நீ புரியவேண்டும் - அது சிறப்பு!
அறியவேண்டும் உன் பொறுப்பு!
புரியாவிட்டால் வரும் வெறுப்பு!
தொடரவிட்டால் அனைவர்க்கும் நமைக்கண்டு நகைப்பு!

தவிர்ப்பும் - தண்டனை தான் -
வலிக்காவிட்டால் கொடுத்தவனக்கு
அதுவே தவிப்பும் தான்!

மாறித்தாம் ஆகவேண்டும் - இல்லையேல்
இருவரும் நாறித்தான் போக வேண்டும்!

இனி சொல்ல ஏதும் இல்லை -
பிணி போக்க வழியும் இல்லை!

ஆயிரம் கைகள் மறைத்தாலும் - ஆதவன்
மறைவதில்லை - ஆயிரம் ஊடல்கள் நடுவில்
வந்தாலும் - என் காதலும் அழிவதில்லை!

அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!

--நிலாக்காவலன்!

Monday, September 24, 2012

செய்திடுவோம் கண்தானம்!!

பெண் செய்தான் - அவளுக்கு
கண் இரண்டு செய்தான்!

இமை சேர்த்தான் - சேர்த்தே
கண்ணிரண்டும் காத்தான்!

கருவிழி அமைத்தான் -
கயல்விழி ஆக்கினான்!

கண்ணுக்குள் காந்தம் வைத்தான் -
பார்வையில் சாந்தம் வைத்தான்!

அத்தனையும் கொடுத்தான் பாவைக்கு -
பார்வையைத் தவிர!

எதையும் கொண்டுவருவதில்லை -
எடுத்துச் செல்வதுமில்லை!
விட்டு விட்டாவது செல்வோம் - நம் பார்வையை!


செய்திடுவோம் கண்தானம் - இப்பாவை போல்
பலர் பார்வை பெற்றிடவே!

Monday, September 10, 2012

பாரதி கண்ட பாரினை அமைத்திடுவோம்

எட்டயபுரத்தில் பிறந்தான் - கவித்திறத்தால்
எட்டா புகழ் பெற்றான்!

மொழிகள் பல அறிந்திருந்தான் - அதிலும் தமிழ்
சிறப்பென உண்மை உரைத்திருந்தான்!!

சக்தி அவன் வணங்கியது !
பாட்டு மூலமாய் போராட்ட -
சக்தி - அவன் வழங்கியது!!

சாதிகளை சாடியவன் - பெண்ணியத்துக்காய்
பாடியவன்!

பாடிவிட்டு அவன் மறைந்தான் -
கேட்டுவிட்டு நாம் மறந்தோம்!!

பெண்ணுரிமை புரிவோம் - நல்
சுதந்திரம் காப்போம்!

சாதிச்செடி அறுப்போம் - அதர்மம்
வெறுப்போம்!

இளமையில் கற்ப்போம் -
முதுமையில் கற்பிப்போம்!

பாரதி கண்ட பாரினை அமைத்திடுவோம்!

Wednesday, August 15, 2012

என் தந்தை!

எனை கொஞ்சி பார்த்ததும் இல்லை -
என் தந்தை!
திட்டி தீர்த்ததும் இல்லை!

கோபத்தில் வார்த்தைகளால் தடித்தவர் - என்றும்
தேகத்தால் சிறுத்தவர்!

பகட்டாய் அவர் திரிந்ததும் இல்லை -
பண்பாடின்றி நடந்ததும் இல்லை!

வகுப்பு கணக்குகளை அடித்து கற்று கொடுத்தவர் -
வாழ்க்கை கணக்குகளை வாழ்ந்து காட்டினார்!

வேலை இல்லை - ஆனால்
வெட்டியாய் இருந்ததும் இல்லை!

கல்நெஞ்சக்காரர் - பாசத்தை அடக்கிக்கொள்வதில்!

சொத்தொன்றும் சேர்க்கவில்லை - சொந்தங்களைத் தவிர!

தானே செய்துகொள்ளும் சிகைச் சவரம் -
எளிமையான அலங்காரம்!

ரப்பர் செருப்பு அவர் காலனி-
வெள்ளை வேட்டி சட்டை அவர் பாணி!

அவர் கைவண்ணம்!கலை வண்ணம்!

ஓவியமும், காவியமும் அவர்க்கு எளிது!
அவருடைய எளிமை அனைவர்க்கும் கடிது!
அங்கீகாரம் கிட்டவில்லை - அது கொடிது!

நடந்தே கடந்து இருப்பார் நிலவின் தூரத்தை!

சாதா பேருந்துக்காய் -
கால்கடுக்க நிற்க வைத்தார் -
வாழ்வில் காலணாவின் மதிப்பை புரியவைத்தார்!

பிறந்தது, வளர்ந்தது, விளையாடியது - பசுமலை சொந்தமனையில் -
வாழ்வது வாடகை மனையில்!

உடன்பிறப்புகளுக்கு விட்டு கொடுப்பர்! இவர் - தான்
வாழ்ந்த வீட்டை விற்றுக் கொடுத்தார்!

வீடு இழந்தார்!
வேலை இழந்தார்!
நம்பிக்கையும், சுயகௌரவமும் இழக்கவில்லை!

தாயை போற்றியவர் - அவள் நாமத்தை
தன் முதல் சேய்க்கு சூட்டியவர்! அவர்

தந்தை மற்றும் மாமனார் நாமத்தை - சேர்த்தே
எனக்கு சூட்டினார்!

அவர் வாழ்ந்த வாழ்க்கை சிறப்பு -
பலருக்கு இன்றைய அவர் வாழ்க்கை நிலை சிரிப்பு!

மரநாற்காலி அவர் ஆசனம் -
சிறுவயதில் எனக்கு ஊட்டி விடுவதில்- அவர்
வற்றாத காவிரி நீர் பாசனம்!

அவர் அன்னை அழைத்த பெயர் மாது -
அவர் உள்ளத்தால் என்றும் சாது!

எனை பாசமாய் பாராட்டி நான் உணர்ந்தது இல்லை-
செல்வச் செழிப்பில் எனை சீராட்டியதும் இல்லை!

கசாயமும் - ஆவி பிடித்தலும்
அவர் மருத்துவம் - அதுவே
அவர் புரியவைக்கும் - மனதைரியத்தின் மகத்துவம்!

வீட்டில் உணவில்லை - ஆனாலும்
எங்கள் படிப்புக்கு தடையில்லை!

தந்தையே தானாய் வடிகிறது கண்ணீர்!

உன் தியாகமும்-வீரமும்-சாமர்த்தியமும்!

இது வரையிலும் ஏதும் கேட்டதில்லை - இப்போது கேட்கிறேன்!

மனம் விட்டு பேசிடுங்கள் - உங்கள் பாரத்தை!
இன்னும் கொஞ்சம் மதித்திடுங்கள் - உங்கள் தாரத்தை!
கொஞ்சமேனும் வெளிபடுத்திடுங்கள் - உங்கள் பாசத்தை! நீங்கள்
எங்கள் மேல் வைத்திருக்கும் நேசத்தை!



___________________________________________________________________________________

என் தந்தை! மாதவன் நம்பியாபிள்ளை, ஒய்வு பெற்ற கணக்காளர்! எளிமையானவர்! எனது முதல் முன் மாதிரி! இதுவரையில் நான் அவரிடத்தில் உட்கார்ந்து பொறுப்பாய், பாசமாய் பேசியதில்லை! இணையத்தில் பேசுகின்றேன், பதிவின் மூலமாய்!

தாய், தந்தை நம்மை ஏழ்மையில் வளர்த்திருக்கலாம், ஆனால் பாசத்திற்கு குறைவிருந்திருக்காது! நாம் அதை உணராமல் இருந்திருக்கலாம்! சிறு வயதில் அவர் எனக்கு ஊட்டி விட்டது, உப்புமாவில் மீன்,பொம்மைகள் செய்து கொடுத்தது- பெரிதாய் தோன்றவில்லை! ஆனால் இப்போது  தானாய் சொரிகிறது தண்ணீர்-கண்ணீராய்!
இப்போது வெகு தூரம் தள்ளி இருக்கிறேன், இவையனைத்திற்கும் ஏங்குகிறேன்!

அருகில் இருக்கும் போது கடினமாய் பேசியிருக்கிறேன், இப்போது வடிக்கிறேன் கண்ணீரை எப்படி நொந்திருப்பார்கள் என நினைத்து!
ஏதோ எழுத நினைத்து, ஏதோ எழுதியிருக்கிறேன்!

அனால் மன பாரம் இறக்கிய உணர்வு!
என் தந்தை, என் சிறப்பு!
கர்வத்துடன் சத்தமாய் அழைத்துக் கொள்கிறேன் என் பெயரை

- நம்பி கிருஷ்ணன் மாதவன் என்று!!!




***
எப்போதாவது என் தந்தை இந்த பதிவை, படித்தால் மகிழ்வார் இல்லையா?



Monday, August 6, 2012

HOW TO CREATE A BLOG??

Blogs....... Nowadays it becomes just matter of 10-20 minutes to get started with your own blog!!

Its your own page.... where you can write, add multimedias, advertise, count visitors & etc..


Maintaining a blog is not that much easy as creating a blog... You need to keep on adding your thoughts, so that your blog becomes lively & interesting to the readers.

Very few steps to create a blog.

Sign for a new gmail Id, if you do not have Gmail ID.
Sign in to blogger.com, where you can see the option to create new blog!!
When you click, CREATE NEW BLOG option, You will be asked for some general details, Name of your blog, your blog's URL name/address, theme, writer name & other options! These options are very easy to understand, you wont find any trouble in filling all those.


Once all these are done... Half of your Blog thirsts are watered. You can write in your blog, in the form of posts.

When you click NEW POST option, You will be asked for the title of the post, and the subject.
You can find options, which  looks same in your mailbox. You can change font, size, color, styles, and also includelonks, pictures, videos of your choices.

Also you can find few other options, for your Post.

Where you can add labels to your Post, schedule Your post, & the search description for your post.
This way you can control the readers comments also.

Once you are done with your first post, but still you want to know, how it looks to the readers, You can preview your post, by clicking the PREVIEW option on the top.
If you are satisfied with the preview, You can publish the post, to the readers by clicking PUBLISH option at the top.

And from dashboard, you will be able to change the templates, themes, columns,layouts, and other available options... and the best part of the blogs are, You can post goog;e sponsored advertisements, in your blog, add get paid for the clicks from the users.

Finally, creating a blog is not a big deal, if you have a time to write, and monitor it atleast weekly.


ALL THE VERY BEST TO NEW BLOGGERS!!!

Sunday, July 29, 2012

காதல்!!

எதிர்பதம் இல்லா பதம் - காதல்!
அது இருவர் அமைத்திடும் - ரிதம்!
உண்மையாய் இருந்திட்டால் இதம்!
இல்லையேல் கதை, கதம்! கதம்!

Tuesday, July 3, 2012

Marker Art : 2




வெட்டியாய் இருந்த போது அலுவலக பலகையில் கிறுக்கியது! சுட சுட இப்பொழுது, உங்கள் பார்வைக்காய்!

Think different, Think optimistic, Sometimes U can catch even the sun:-)

Monday, June 25, 2012

கன்னி-கணவன்


கொஞ்சி பேசும் காதலனாய்!
கனிவான கணவனாய்!
இல்லாள் எதிர்பார்ப்புக்கேற்ப இல்லாமல் -
கண்டிப்பான தந்தையாய் ஆனேன்!
கந்தலும் ஆனேன்!
கண்டுகொண்டேன் நான்!
கன்னி கனவென்ன -
கணவன் துயரென்ன?

Sunday, June 17, 2012

காதல்


பிரியமானவர் பிரியும்பொழுது இமை இரண்டும் அழுத்தி மூடிக் கொள்கிறேன்! எப்படியும் கசிந்துவிடுகிறது - காதல்! கண்ணீராய்!

Thursday, June 14, 2012

மடல்

என் இனிய பிரியத்திற்கு,
உனக்கும் எனக்கும் போட்டியென்றால் -
பிறப்பால் முந்திவிட்டாய் நீ!
பாசத்தால் முந்தநினைக்கின்றேன் நான்!
ஆனாலும் இன்று பலநேரம் கோபத்தின் முன் நிற்கிறேன் -
அதனால்  பாசவெளிப்பாட்டில் பின் நிற்கிறேன்!
என் இதயமும் சதையால் ஆனது தானம்மா!
உன் பல நேர தொடர் தவறுகள் முள்ளாய் தைக்கும் போது -
வார்த்தைகளால் கொந்தளிக்கிறேன்!
பின் கண்ணிரண்டில் உப்புத்தண்ணீரை கொப்பளிக்கிறேன்!
என் மனதில் பட்டதை கொட்டிவைக்கிறேன்!
புரிவதும் - பிடிவாதத்தால் அழிவதும் உன் பிரியம்!
நம்பிக்கையுடன் பாசக்கோட்டையை விட்டு வைக்கிறேன் -
நீ வந்து விளக்கேற்றிட!

Saturday, June 9, 2012

உன்நினைப்பு!

நீ என் அருகில் இல்லை!
ஆனால் நினைவில் நிற்கிறாய்!
இசை கேட்டு கவனம் திருப்பலாம் என்றால் - அத்தனையிலும்
நீயே பவனி வருகிறாய்!
நீ இல்லா இடம் பாலைவனம்!
பாலைவனத்து மழை - என் கண்ணில்!
நினைவில் மட்டும் நீ -
பாலைவனத்து இடி!
உன்நினைவால் நானும் ஆகிறேன் தவிடுபொடி!
இது உறவு தொலைத்தவன் கிறுக்கல் அல்ல!
உன் உறவின் அருமை புரிந்தவனின் கிறுக்கல்!
சிறு குழந்தையாய் வந்தாய் - எனை குழந்தையாக்கி சென்றாய்!
துயில் எழுந்திடு சீக்கிரம் - உன் அழைப்பிற்க்காய் காத்திருக்கிறது
என் அலைபேசியின் பச்சை பொத்தான்!
சேர்ந்தே தவிக்கின்றான் உன் அத்தான்!



Friday, May 25, 2012

கண்ணாம்பூச்சி

நள்ளிரவில் பிறந்து
நடுகடலில் மிதந்து
மெதுமெதுவாய் தவழ்ந்து
மென்மையாய் சிவந்து
உயரமாய் எழுந்து
உச்சிக்காலத்தில் கடிந்து
மேன்மையாய் ஓய்ந்து
மேகத்தினுள் மறைந்து
மாலையில் சாய்ந்து
மலையினுள் ஒளிந்து
ஏய் சூரியனே!!
உனக்கு ஒவ்வொரு நாளும் என்ன?
கண்ணாம்பூச்சியா?

Thursday, May 24, 2012

இளைஞனே வீறு கொள்!!


கல்வியை கற்றாள வேண்டிய நீ! இன்று
கள் அல்லவா அடித்து கூத்தாடுகிறாய்!

எழுதுகோல் பிடித்தெழுத வேண்டிய நீ! இன்று
ஊதுகுழலால் புகைவண்டியல்லவா ஒட்டிக்கொண்டிருக்கிறாய்!

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்கவேண்டிய நீ! இன்று
சாதிச்சாக்கடைக்குள் அல்லவா வீழ்ந்துகிடக்கின்றாய்!

அன்னையன்புக்கு அடிமையாக வேண்டிய நீ! இன்று
அராஜகத்திற்கு அல்லவா துணை போகின்றாய்!

பிறர்பசி போக்க வேண்டிய நீ! இன்று
உன் பசிக்கே வலிதெரியாதல்லவா திண்டாடுகிறாய்!

சிந்தித்து செயல்பட வேண்டிய நீ! இன்று
சினிமா சிறைக்குள் அல்லவா சிக்கிகொண்டிருக்கிறாய்!

காதலில் களிப்புற வேண்டிய நீ! இன்று
காமத்தை நோக்கியல்லவா திரும்பிக்கொண்டிருக்கிறாய்!

உழைத்து உருக வேண்டிய நீ! இன்று
அல்லல்படாது ஊஞ்சலாட அல்லவா அவாக்கொள்கிறாய்!

தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய நீ! இன்று
மேன்மேலும் தவறல்லவா இளைத்துக்கொண்டிருக்கிறாய்!

உன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று புலம்புகின்றாயே!!
நீ யாரை புரிந்து கொண்டாய்??
உன் நாட்டையா?? அல்லது
அழுது வடியும் உன் வீட்டையா?

உன் வகுப்புத் தோழியின் நன் - நட்பிலும்
நஞ்சை தானே கக்கினாய்!

சரி இளைஞனே!
இருட்டிற்கு இரையானது போதும்!

இளைஞனே வீறு கொள்!

உன் பாதை மலர்களால் நிறைந்தது அல்ல!
ஆனால் முற்களையும் முல்லையாக்கும் திறனுடையவன் நீ!

இது வரை நீ அரியணை ஏற்றிவிட்டது போதும்!
எப்பொழுது நீ அரியணை ஏற போகின்றாய்!

ன்பாலும் அறிவாலும் -
க்கத்தை உருவாக்கு!
ரும்புக்கர முயற்சியால் -
ழத்தில் விளக்கேற்று!
ண்மையாய் உழைத்து -
ரை வளமாக்கு!
க்காளமிடும் -
மாற்றுக்காரர்களை அழித்திடு!
யம் தவிர்!
ழுக்கம் கொள்!
ய்வு கொள்ளாதே!
வை வழியில் நடந்திடு!

ஆகவே இந்திய இளைஞனே - வீறுகொள்!

இந்நாடு உன்னை தோளில் தூக்கிக்கொள்ள!

Tuesday, May 22, 2012

MY MOMMY!

What to carve??
Your Love??
Your Patience??
Your Talence??
Whenever I fail, I cry!
But, your love made me to try!!
In my childhood, I was wild-wolf!
you carved me as a man, by your mild!!
To meet the error, I fear!
Your love was my Protective wear!!
In all my nineteen - You're
My ALL!!
I was in you - near an year!
And I'm here - to hold you for years!!
Mommy - what I'm gonna reciprocate to you??
In my next birth - I pray to God - to be -
Mother of my mommy!!

PonMaaMagan 

Sunday, May 20, 2012

அம்மா - 2

ஏடு எடுத்தேன்!
உன்னை கவியாய் தீட்டிட!
ஆனால் எதை வரைந்திட?
உன் அன்பையா?
உன் பொறுமையையா?
உன் சாமர்த்தியத்தையா?
தோற்கின்ற போதெல்லாம் அழுது கொண்டிருந்தேன்!
உன் அன்பின் ஆக்கம் தாம் - எனை மீண்டும் முயற்சிக்க வைத்தது!
சிறுவயதில் சிறுபிள்ளைதனமாய் சீரிக்கொன்டிருந்தேன்!
உன் பொறுமையெனும் உளிதான் எனை சிறப்பாய் செதுக்கியது!
சோதனைகள் சூளும் போது சோர்வுற்றுறிறுந்தேன்!
உன் சாமர்த்திய சாணக்கியத்தனம் தான் - எனை சாதனை புரிய வைத்தது!
என் எல்லா 19 வருடத்திலும் - நீ தான்
என் எல்லாமும்!
ஒரு வருட காலம் எனை சுமந்தாய் - உனக்குள்ளே!
நானும் உன்னை சுமப்பேன் அம்மா - இனி
பல வருட காலம்!
சுமையாய் அல்ல - சுகமாய்!
உயிர்தந்து! உடல்தந்து! பின்
உதிரமும் தந்தாய்!
எதை தரப்போகிறேன் உனக்கு??
தாயே வேண்டுகிறேன் இறைவனிடம் - மறுபிறப்பில்
என் தாய் உனக்கு - தாயாக வேண்டுமென்று!



Thursday, April 19, 2012

அம்மா

ஒன்றும் தெரியாதவள் என்ற பட்டத்துக்கு
சொந்தக்காரி!
நான் கொடுத்த தொல்லைகளால் தினமும்
நொந்தமனதுக்காரி!

நன்றாகத்தான் வளர்த்தால் அவள் எனை -
கோபம்கொண்டு திரிந்தேன் அதுவென் வினை!

இரு 15 மாதங்கள் பால் ஊட்டினாள் - பதிலுக்கு
இரக்கமின்றி கை-கால் நீட்டினேன்!

உண்ணாமல் உறங்காமல் எனை காத்தாய் - உண்மை
உணராமல் உனை இகழ்ந்தேன்!

நான் எதை கேட்டாலும் கொடுத்தவள் - இன்று நான்
பேசுவதை கேட்க முடியாமல் தவிக்கிறாள்!

எனை கண்ணில் வைத்து பார்த்துகொண்டவள் -
கண் பார்வை குறைந்து நிற்கிறாள்!

அருகில் இருக்கும் போது உன் அருமை உணரவில்லை - உன் அருமை
உணர்கிறேன், நெருங்க முடியவில்லை!

எனை சுமந்தாய் அம்மா இரண்டைந்து மாதம் - சுமக்க
துடிக்கிறேன் அம்மா உன் அடிப்பாதம்!

சூல் கொள்கிறேன் கொண்ட கோபம் குறைக்க -
நான் செய்த பாபம் துடைக்க!

நீ அனுபவித்தது ஏதும் இல்லை - இனி
அந்த குறை உனக்கு தேவை இல்லை!

ஏங்குகிறேன் அம்மா உனை காண -
உந்தன் மகிழ்ச்சி காண!


- பொன்னம்மாள் மகன்!

Tuesday, April 17, 2012

வாழ்க்கை

காலை குளு-தென்றல் கொண்டு வரும்
கச்சேரியின் கானம் - காகத்தின் கவியோசை!
ரசித்துப்பார் - வாழ்வின் ருசி புரியும்!

பொன்-மா-மகன்!

நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டால் வாழ்வில் அருமை இல்லை!
கிடைத்ததை விரும்பிப்பார் - வாழ்க்கையை அமைதியாய் உணர்வாய்!

பேருந்து-பயணம்

நிலா மூடும் மேகமும் - தட்டி விட்டு
ஓடும் நிலவும் !
விளையாடும் நேரத்தில் பேருந்தில் பயணம்!

மனக்கவலைகளை மறப்பதற்கும்
இன்பக்கலவைகளில் மிதப்பதற்கும்!
பேர்-உந்துதல் தரும் தருணம்!

தனியாகத்தான் பயணம் செய்ய வந்தேன் - இப்போது
என்னோடு இருவர்!
ஒன்று வான் நிலா! மற்றொன்று
என் மன நிலா!

-பொன்மாமகன்

நான் - அவள்

முதலாமாண்டு முதல்நாள் முதல் முறை
பார்க்கவே இல்லை நான் - அவளை!
என்று நான் காதலில் விழுந்தேனோ? அன்றே
ஆனேன் அவள் வீட்டு கிணற்றுத் - தவளை!
மூன்று பருவங்கள் கழிந்தன - காதல் அரும்பாமலே
அரும்பிய பின் வளர்ந்தன யாரும் அறியாமலே!
முப்பொழுதும் சண்டையிடுகிறோம் ! ஒன்றை மட்டும் மறக்காமல் -
அவளுக்காய் நான் - எனக்காய் அவள்!

- my love - gist

Sunday, April 15, 2012

பெண் - வானம்




சுட்டெரிக்கும் சூரியனும்!
சூடு தணிக்கும் வெண்ணிலவும்!
ஒழித்துவைக்கும் மேகங்களும்!
குவிந்து கிடக்கும் நட்சத்திரங்களும்!
மழை இருட்டில் ஒளிவீசும் மின்னலும்!
காது கிழிக்கும் இடியோசையும்
வண்ணப்பிறை வானவில்லும்!
வந்து வந்து சென்றாலும் - அப்படியே
இருக்கிறது வானம்!
அதுபோல் தான் பெண்னே நீயும்!
சிறுதவறால் வரும் அவமானம் -
சாதித்தால் அனைத்தும் வெகுமானம்!
சந்தோசம் என்ன?
சில தோஷம் என்ன?
தேகம் என்ன?
சந்தேகம் என்ன?
நம்பிக்கை என்ன?
அவநம்பிக்கை என்ன?
அனைத்துமே உனக்கு துச்சம்!
எதையும் மனதில்  வைக்காதே மிச்சம்!
எப்பொழுதும் முடிவெடுத்திடு நிதானமாய்!  முடிவில் -
கொடுத்திடு உன் அன்பை  தானமாய்!
என்றும் இருப்பாய் பெண்னே வானமாய்!

- பொன்மாமகன்


--கண்டிப்பாய் விமர்சித்திடுங்கள்!