Thursday, May 24, 2012

இளைஞனே வீறு கொள்!!


கல்வியை கற்றாள வேண்டிய நீ! இன்று
கள் அல்லவா அடித்து கூத்தாடுகிறாய்!

எழுதுகோல் பிடித்தெழுத வேண்டிய நீ! இன்று
ஊதுகுழலால் புகைவண்டியல்லவா ஒட்டிக்கொண்டிருக்கிறாய்!

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்கவேண்டிய நீ! இன்று
சாதிச்சாக்கடைக்குள் அல்லவா வீழ்ந்துகிடக்கின்றாய்!

அன்னையன்புக்கு அடிமையாக வேண்டிய நீ! இன்று
அராஜகத்திற்கு அல்லவா துணை போகின்றாய்!

பிறர்பசி போக்க வேண்டிய நீ! இன்று
உன் பசிக்கே வலிதெரியாதல்லவா திண்டாடுகிறாய்!

சிந்தித்து செயல்பட வேண்டிய நீ! இன்று
சினிமா சிறைக்குள் அல்லவா சிக்கிகொண்டிருக்கிறாய்!

காதலில் களிப்புற வேண்டிய நீ! இன்று
காமத்தை நோக்கியல்லவா திரும்பிக்கொண்டிருக்கிறாய்!

உழைத்து உருக வேண்டிய நீ! இன்று
அல்லல்படாது ஊஞ்சலாட அல்லவா அவாக்கொள்கிறாய்!

தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய நீ! இன்று
மேன்மேலும் தவறல்லவா இளைத்துக்கொண்டிருக்கிறாய்!

உன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று புலம்புகின்றாயே!!
நீ யாரை புரிந்து கொண்டாய்??
உன் நாட்டையா?? அல்லது
அழுது வடியும் உன் வீட்டையா?

உன் வகுப்புத் தோழியின் நன் - நட்பிலும்
நஞ்சை தானே கக்கினாய்!

சரி இளைஞனே!
இருட்டிற்கு இரையானது போதும்!

இளைஞனே வீறு கொள்!

உன் பாதை மலர்களால் நிறைந்தது அல்ல!
ஆனால் முற்களையும் முல்லையாக்கும் திறனுடையவன் நீ!

இது வரை நீ அரியணை ஏற்றிவிட்டது போதும்!
எப்பொழுது நீ அரியணை ஏற போகின்றாய்!

ன்பாலும் அறிவாலும் -
க்கத்தை உருவாக்கு!
ரும்புக்கர முயற்சியால் -
ழத்தில் விளக்கேற்று!
ண்மையாய் உழைத்து -
ரை வளமாக்கு!
க்காளமிடும் -
மாற்றுக்காரர்களை அழித்திடு!
யம் தவிர்!
ழுக்கம் கொள்!
ய்வு கொள்ளாதே!
வை வழியில் நடந்திடு!

ஆகவே இந்திய இளைஞனே - வீறுகொள்!

இந்நாடு உன்னை தோளில் தூக்கிக்கொள்ள!

1 comment:

  1. மிக நல்ல கருத்துகள் - உங்களுக்கு விருப்பம் இருப்பின் நல்ல பத்திரிக்கைகளுக்கு அனுப்பவும் - மேலும் பலரை சென்றடையும். பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete