Sunday, October 28, 2012

எது பெண்ணுரிமை இல்லை?



இதை நான் எழுதுவதிற்கான காரணம், ஸ்டார் விஜயில் நடந்த நீயா? நானா? விவாதம் தான்!

விவாதத்தின் தலைப்பு "பெண்களின் உடை அவர்கள் மீதான வன்முறைக்கு காரணமா?"

அதில் பேசிய பல சகோதரர்கள், ஒரு பெண் நாகரீக உடை அணியும் பொழுது எங்களுக்கு பாராட்ட/கிண்டலடிக்க தோணுகின்றது என்றனர்! கண்டிப்பாய் இந்த காலகட்டத்தில் ஒரு முழுவதும் போர்த்திக்கொண்டு சென்றாலும், கண்டிப்பாய் அவள் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றாள்! கண்டிப்ப்பாய் இது ஆண்களின் தவறு தான்! அப்படி கிண்டலடிக்கும் எந்த ஆண் மகனும் தன் தாயையோ, சகோதரியையோ,காதலியையோ வேறொருவன் கிண்டளித்தால் பொறுத்துகொல்லமாட்டான்! அப்படியிருக்கையில் ஆண்கள், கண்டிப்பாய் இரட்டை நிலை கொண்டிருக்கின்றனர், என்பது ஒரு சக ஆணாய் நான் ஒற்றுக்கொள்ள வேண்டிய உண்மை, கவலைப்பட வேண்டியது, திருத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள வேண்டியது!

அதே நேரத்தில், ஒரு மென்மையான பாராட்டை, அழகை புகழும் விமர்சனத்தை பெண்கள், இளைஞிகள் ரசிக்கின்றனர் என்பதும் உண்மை!

இதற்கும் இக்கட்டுரையின் தலைப்பிற்கும், என்ன சம்பந்தம்? இந்த விவாதத்தில் பங்குகொண்ட பல சகோக்களும், உடையணிவது எங்கள் சுதந்திரம் என்றே கூறினர்! கண்டிப்பாய் ஏற்றுக்கொள்கிறேன் அது உங்கள் சுதந்திரம் தான், ஆனால் சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் குறித்து ஓர் ஆங்கில தத்துவயியலாளர் கூறுகிறார், "எது கட்டுபாடுடன் இருக்கிறதோ, அதுவே சுதந்திரம்" என்று! எவ்வளவு நிதர்சனமான விளக்கம்!

இன்றைய இளைஞிகள் பலரை பார்கின்றேன் குறிப்பாய் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும், தைரியத்தில் பெண்களின் நிலை பெரிதாக மாற்றம் ஏற்பட்டிருகின்றது! இன்று அவர்கள் பெரிதாய் படித்திருக்கின்றனர், கைநிறைய சம்பாதிக்கின்றனர், நல்ல முன்னேற்றம்!! அனால் அதே முன்னேற்றம் அவர்கள் சிந்தனையில் சின்னதொரு தவறான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது, -மேற்கத்திய உடை கலாசார ஏற்பு!

சகோக்களே, மேற்கத்திய பெண்களின் உடையான ஜீன்ஸ் அணிகின்றீர்கள், உங்களுக்கு நடப்பதற்கும் ஓடுவதற்கும் இலகுவாக இருக்கின்றது, வேலை நிமித்தமாய் ஷர்ட் பேண்ட் அணிகின்றீர்கள், கண்டிப்பாய் இது உங்கள் சுதந்திரம் தான்! ஆனால் டி-ஷர்ட்-உம் லக்கின்ஸ்-உம் உங்கள் சுதந்திரம் என்று கூறாதீர்கள், கண்டிப்பாய் உங்களை நீங்களே உடை குறித்த தவறான புரிதலுக்கு உட்படுத்திகொள்கிறீர்கள்!

உடை என்பது மறைபதற்க்கே அன்றி திரை காட்ட அல்ல! உடை உங்கள் பாதுகாப்பிற்கும், வசதிக்குமே அன்றி வேறெதற்கும் அல்ல!

உங்களை ஷர்ட்,ஜீன்ஸ்-க்கு துப்பட்டா அணியுங்கள் என்று சொல்லவில்லை, சுடிதாருக்கு துப்பட்டா அணியுங்கள் என்று தான் சொல்லுகின்றேன்!

நான் புனே-வில் கண்ட ஒரு பெண்ணின் டி-ஷர்ட் முன் பக்க வாசகம், "i am a virgin!!". பின் பக்க வாசகம், "but its my old T-shirt !!"

மனதை தொட்டு சொல்லுங்கள் இதுவா நீங்கள் எதிர்ப்பார்க்கும் சுதந்திரம்! இது போல் பல கண்டிருக்கிறேன்!

விளையாடுவதற்கும், ஆடல் நிகழ்ச்சியில் பங்குபெறுவதர்க்கும் வருகின்ற பெண்கள் பெரும்பாலும், அதற்க்கு உண்டான உடை அணிவதில்லை, இவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், நீங்கள் உங்களை அங்கே காட்சி பொருளாய் ஆக்கிகொண்டிருக்கின்றனர்!

 

பெண்கள் தன்னை ஒருவன் தன உடைகுறித்து கிண்டலடித்தால் கவலை கொள்கிறாள், அதே பெண் மட்டமாய் ஒரு ஆண் உடை அணியும் அவனிடம் அறிவுரையோ சொல்லவோ அல்லது கண்டுகொள்ளாது ஒதுக்குவதோ இல்லை, மாறாய் தன தோழிகளிடத்தில் அதை பற்றி கண்டிப்பாய் கிண்டலடிக்கவே செய்கின்றாள்!

சமுதாயம் என்பது நாம், தான்! முதலில் மாறுபவர்கள், நாமாய் இருப்பின் மாற்றம் வந்தே தீரும்!

இன்னுமொரு வருத்தம், மேற்கத்திய கலாசாரத்தை ஏற்கும் அளவுக்கு உயர்ந்த நீங்கள், ஏற்கக்கூடிய அளவிலான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளகூடிய அளவிற்கு உயரவில்லை!

ஒரு பெண் சகோ பேசுகிறார், அவர்களது அலுவலகத்தில் ஒரு ஆண் உள்ளாடை வெளியே தெரியும் படியாக ஜீன் அணிந்திருந்தான், அவன் இருக்கும் பக்கம் செல்வதே நான் அவமானமாய் கருதினேன் என்று!

இது குறித்து கவிஞர் குட்டி ரேவதியிடம் கேட்ட போது, அவர் கூறிய பதில், "அப்படி உடை அணிவது அவன் விருப்பம், சுதந்திரம் - அதே போல் பெண்கள் உடை அணிவது அவர்கள் சுதந்திரம்" என்று!!

இது எவ்வளவு தூரம் ஏற்கக்கூடிய கருத்து?

இதை மட்டும் தான் அணியவேண்டும் என்றால் அது உங்கள் சுதந்திரத்தில் தலையிடுவது தான், ஆனால் இதை மட்டும் அணியாதீர்கள் என்பது.. எதோ உங்கள் நலனுக்காய் கூறும் யோசனையாய் தான் தெரிகின்றது!

உங்கள் உடை நல்ல ரசனைக்காரனை கவர்வதை இருத்தல் தவறில்லை, காமகொடுரர்களை கவர்வதை இருப்பது, உங்களுக்கு நல்லதா?

நீங்கள் பெற்றடைய வேண்டிய சுதந்திரம் எத்தனையோ இருக்கின்றது மிச்சம்! முதலில், சோப்புக்கும்,செண்டுக்கும், சிப்சுக்கும் விளம்பரப் பொருளாய் வருவதை தடுத்து நிறுத்திடுங்கள்! ஆண் உள்ளாடை விளம்பரத்திற்கும், பெண்ணிற்கும் என்ன சம்பந்தம், நீங்கள் என்ன விளம்பரத்திர்கான காட்சிப்பொருளா?

அலுவலக அதிகாரத்தை பிடிப்பது அல்ல பெண் சுதந்திரம், வீட்டிலும் சரிசம அதிகாரம் பெறுவதே, சுதந்திரம்!

33% ஒதுக்கீடு பெறுவது உங்கள் சுதந்திரம் அல்ல, ஒதுக்கீடு இல்லாமலே சரிபாதி போட்டியிடுவது தான் உங்கள் முழுச்சுதந்திரம்!

நாட்டின் ஜனாதிபதியாய் ஒரு பெண் வந்து விட்டதல்ல சுதந்திரம், எங்கோ ஒரு மூலையில்,குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு அடிபட்டுக்கொண்டும் அடுப்பூதிக்கொண்டும் இருப்பவளும் நிம்மதியாய் இருப்பதே பெண்மைக்கான முழுச்சுதந்திரம்!

பெண்கள் அனைவர்க்கும் சின்னதொரு வேண்டுகோள், ஆணாதிக்கம் என்பது.. இந்திய ஆண்கள் மனதில் ஊறி போன ஒன்று! தயை செய்து உங்கள் மகனிடத்திலிருந்து அதை விலக்கியே வையுங்கள், அதே நேரத்தில் உங்கள் பெண் குழந்தையிடம், பெண் சுதந்திரம் என்றால் என்ன என்பதையும், விளக்கியே வையுங்கள்!

இது என் முதல் கட்டுரை, நீயா?நானா? விவாதம் யூடியுபில் பார்த்தவுடன் எழுத நேர்ந்தது!

எழுத்துப்பிழை இருக்கலாம், கருத்துப்பிழை இருக்க வாய்ப்பில்லை! ஏதேனும் ஆட்சேபனை இருப்பின்...... கண்டிப்பாய் விவாதிக்கலாம்.. உண்மையை இருவரும் உணர்ந்திட!

 

 
~பொன்மாமகன்