Thursday, September 27, 2012

அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!

அவள் அன்பு - அது
எனை கொய்யும் அம்பு!

அவளின் பாசம் - என்னுயிர்
வாழ வைக்கும் சுவாசம்!

இப்படித்தான் கழிகின்றன என் முப்பொழுதும்!
இனி ஏதும் கேட்கப்போவதில்லை எப்பொழுதும்!

தவறு செய்யாதோர் யாருமில்லை - தப்பாக
அதை தொடரவிட்டால் - உறவினில் சாறும் இல்லை!

கோபம் நான் கொண்ட பாபம்!
மெய் புரிந்தாயாயின் -
படுவாய் பரிதாபம்!!

கடந்ததென்னவோ இரு பத்து  ஆண்டுகள்  - காத்துக் -
கிடக்கின்றன பல பத்து ஆண்டுகள்!!

மாற்றம் ஒன்றே மாறாதது - மனதும்
மாறிப்போனால் வடு ஆறாதது!

நீ புரியவேண்டும் - அது சிறப்பு!
அறியவேண்டும் உன் பொறுப்பு!
புரியாவிட்டால் வரும் வெறுப்பு!
தொடரவிட்டால் அனைவர்க்கும் நமைக்கண்டு நகைப்பு!

தவிர்ப்பும் - தண்டனை தான் -
வலிக்காவிட்டால் கொடுத்தவனக்கு
அதுவே தவிப்பும் தான்!

மாறித்தாம் ஆகவேண்டும் - இல்லையேல்
இருவரும் நாறித்தான் போக வேண்டும்!

இனி சொல்ல ஏதும் இல்லை -
பிணி போக்க வழியும் இல்லை!

ஆயிரம் கைகள் மறைத்தாலும் - ஆதவன்
மறைவதில்லை - ஆயிரம் ஊடல்கள் நடுவில்
வந்தாலும் - என் காதலும் அழிவதில்லை!

அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!

--நிலாக்காவலன்!

Monday, September 24, 2012

செய்திடுவோம் கண்தானம்!!

பெண் செய்தான் - அவளுக்கு
கண் இரண்டு செய்தான்!

இமை சேர்த்தான் - சேர்த்தே
கண்ணிரண்டும் காத்தான்!

கருவிழி அமைத்தான் -
கயல்விழி ஆக்கினான்!

கண்ணுக்குள் காந்தம் வைத்தான் -
பார்வையில் சாந்தம் வைத்தான்!

அத்தனையும் கொடுத்தான் பாவைக்கு -
பார்வையைத் தவிர!

எதையும் கொண்டுவருவதில்லை -
எடுத்துச் செல்வதுமில்லை!
விட்டு விட்டாவது செல்வோம் - நம் பார்வையை!


செய்திடுவோம் கண்தானம் - இப்பாவை போல்
பலர் பார்வை பெற்றிடவே!

Monday, September 10, 2012

பாரதி கண்ட பாரினை அமைத்திடுவோம்

எட்டயபுரத்தில் பிறந்தான் - கவித்திறத்தால்
எட்டா புகழ் பெற்றான்!

மொழிகள் பல அறிந்திருந்தான் - அதிலும் தமிழ்
சிறப்பென உண்மை உரைத்திருந்தான்!!

சக்தி அவன் வணங்கியது !
பாட்டு மூலமாய் போராட்ட -
சக்தி - அவன் வழங்கியது!!

சாதிகளை சாடியவன் - பெண்ணியத்துக்காய்
பாடியவன்!

பாடிவிட்டு அவன் மறைந்தான் -
கேட்டுவிட்டு நாம் மறந்தோம்!!

பெண்ணுரிமை புரிவோம் - நல்
சுதந்திரம் காப்போம்!

சாதிச்செடி அறுப்போம் - அதர்மம்
வெறுப்போம்!

இளமையில் கற்ப்போம் -
முதுமையில் கற்பிப்போம்!

பாரதி கண்ட பாரினை அமைத்திடுவோம்!