Saturday, January 12, 2013

எம்நன்றிகள் காணிக்கை!

உயிர் படைத்தது பிரம்மன் - இங்கே
உயிர்களுக்கு உணவு படைப்பவன் - உழவன்!

நவீனமாம், அறிவியலாம் - உரம்
வீசினான் மண்னுக்கு - அவன்
கண்னுக்கு தண்ணி வைத்து - மாயமாய்
அழித்தது விவசாயத்தை - விஷ சாயமாய்!

ஒரு நாடு!
ஒரே சட்டம!!
உழவுக்கு அல்ல - இந்நாட்டில்??

தண்ணிக்கு தான் எத்தனை சண்டை?

அடக்க வேண்டிய தண்ணி(TASMAC) - ஆறாக
ஓடுகிறது! ஆர்ப்பரிக்க வேண்டிய ஆறு
குட்டையாய் தேய்கிறது!

பயிரிட்டவன் பட்டினி கிடக்க -பங்குச்சந்தையில்
விற்றவன் - பகட்டாய் பவனி வருகிறான்!

அரை சான் உறுப்பு அடங்க -
ஏக்கரா வரப்பு விற்கின்றான் - பின்
திக்கு திசையின்றி நிற்கின்றான்!

அறுவடை இடம்!
ஆறு மாடிகட்டடம்!
பகட்டாய் தான் இருக்கும் -
பஞ்சம் வரும் வரையிலும்!

கதிரவன் நித்தம் வருகிறான் - கதிரருப்பவன்
சத்தமின்றி கரைகிறான்!

பங்குச்சந்தை ஏற்றம் -
சங்குச்சந்தையின் லாபம்!

தானிய இறக்குமதி - கையேந்தலின்
துவக்கம் என்பதே நியதி!

நாட்டில் அரசியலும் - அன்னமிடலும்
தகிடுதத்தம் ஆனது - இளைஞரின்மையால்!

விளைவு - நாட்டின் வளர்ச்சி
வரைப்படத்தில் பெரும் வளைவு!

அறிஞர்களே!
அதிகாரிகளே!
அரசியல் கெட்டிருக்கலாம் -
அரசும் கூட கெட்டிருக்கலாம் - ஆனால் நீங்கள்
மனசு வைத்தால் - விவசாயம் செழிக்கலாம்!

பரப்பிடுங்கள் இயற்கை உரங்களை - அழித்திடுங்கள்
அபாய செயற்கை கரங்களை!

அறிவுசார் விவாதங்கள் நடந்திரட்டும்!
உழவுக்கு புதுத்திட்டங்கள் வந்திரட்டும்!

மானியங்கள் சென்று சேர்ந்திடட்டும் -
மானுட பிரம்மன் அன்னம் படைக்கட்டும்!

உழவர்சந்தை பெருகட்டும் - உழவர்
வாழ்வு தழைக்கட்டும்!

நாடு இஞ்சினியர்கள் கண்டது போதும் -
எஞ்சி நிற்போராவது காடு காத்திடட்டும்!

படிப்போம் விவசாயத்தை -
படைப்போம் பல தானியத்தை!

எத்தனை எத்தனை காணிக்கை -
இத்தனை நாள்களில் இறைவனுக்கு!

இந்த ஒற்றை நாளில் - நாட்டின் காணி
பிரம்மனுக்கு மரியாதை செலுத்துவோம்!


காணி காத்தோருக்கு - எம்நன்றிகள் காணிக்கை!





Tuesday, January 8, 2013

நாட்டு சகோதரிகள் - நலமாய் நடமாடிட!


அரை குறை - அடக்கம் உடைத்தால்
அவன் ஆணும் அல்ல!

அரை குறை - ஆபாசம் காட்டினால்
அவள் பெண்ணும் அல்ல!

பெண்ணுக்கு மட்டும் தான் என்றால் -
கற்பும் தப்பு தான்!

ஆணும் அடக்கி வாழ்ந்தால் -
கற்பும் காப்பு தான்!

விலங்கிலிருந்தே வளர்ந்தோம் - அறிவின் வளர்ச்சியால்!
இன்று விலங்காகி திரிகிறோம் - ஆசை வெறியால்!

தப்பென்று உணர்ந்தும் தாவத் தயாராகிறான் -
தளர்ந்த தண்டனைகளால்!

சபலம் பலம் அல்ல- பலவீனம்!

மென்மையிடத்து வீரம் -
கோழைக்கு ஆதாரம்!

பெண்ணை தாயாக போற்றிய நாடு - இன்று
போகபொருளாய் தூற்றுகிற நாடு!

ஆண் உள்ளாடைக்கும் ஆடை களைகிறாள் -
நறுமண சோப்புக்கும் சோடை போகிறாள் -
விளம்பரமாம் - வர்தகமாம்!
எதிர்ப்போர் யாரும் இல்லை - பெண் இனத்திலும் கூட!!

உடை உடைப்பது பெண்ணியம் அல்ல -
தடை கடப்பதே!

பெண் சுதந்திரமாம்! உயிர் மூச்சாம்!
நாட்டில் தனியாய் நடக்க வழியில்லை -
படிப்பெதற்கு?வேலையெதர்க்கு?பணமெதற்கு?
பாதுகாப்பு இல்லாது போகையில்?

உன் உடைகளின் மேல் கவனம் கொள்!
உரசத் துனிபவனை - அவ்விடமே கொல்!

சக்திகளே, சக்தி கொள்ளுங்கள்!
சகதிகளே, புத்தி கொள்ளுங்கள்!

மது வேகம் -
மாது மோகம்!
பெண்ணிற்கு சேதம் -
தொடர்கிறது சோகம்!

குடிமகன்களே போதை கலைந்திடுங்கள் -
கோதைகளை காத்திடுங்கள்!

தாயாய் பாலுட்டியவள்!
தமக்கையாய் தாலாட்டியவள்!
தங்கையை சண்டையிட்டவள்!
தோழியாய் அரவணைத்தவள்!
தாரமாய் முழு மனிதனாக்கியவள்!
மகளாய் உன்னை மகிழ்ச்சிகொளச்செய்தவள்!

அத்தனையும் பெண்ணாய் இருக்க -
பெண் பித்தனாய் நாசம் செய்யாதே!

உன் போதை ஒழித்து -
புது பாதை வகுத்துக்கொடு!
நாட்டு சகோதரிகள் - நலமாய் நடமாடிட!