பங்கேற்போம் அரசியலில்!

இளைஞர் பட்டாளம் மிகு நாடு!
போலி-பெருமை எதற்கு?
அத்துணை இளைஞனும் சீர்கேட்டிற்கு அடிமையானபின்?
அவனை சொல்லி குற்றமில்லை!
எவனிருக்கிறான் தலைவன் என்று?

சக்கர வண்டியில் செல்கிறான் ஒருவன்!
முக்கால் கொண்டிருக்கிறான் ஒருவன்!
மௌனச்சாமியாராய் இருக்கின்றான் ஒருவன்!
கைத்தாங்கலாய் அழைத்து செல்லபடுகிறான் ஒருவன்!
பெண்ணை சூறையாடி முழிக்கும் ஒருவன்!

ஜனாதிபதியாம் - மண்ணாங்கட்டியாம்!
யார் கேட்டார் - அப்பதவி வேண்டும் என்று!
சாவி கொடுத்த பொம்மையாய் -
அதட்டலுக்கு ஆடும் குரங்காய் -
அப்பதவி இருந்திடும் போது!

பரிசீலித்திருக்கின்றனர் கிழவர்கள் 5 பேரை!

கலாம் அனால் என்ன - பிரணாப் ஆனால் என்ன?

சிகரங்கள் செல்லும் நபர் வேண்டாம் -
சீர்திருத்தம் செய்யும் நபர்தாம் வேண்டும்!

102 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் பொறுப்பான
ஒரு இளைஞன் கூடவா கிடைக்கவில்லை இவர்கட்க்கு?

அவர்களை எப்படி குறை சொல்ல முடியும்?

க்கிரமங்களை எதிர்த்து போராடும்
ஹசாரேவும், ராம்தேவும் கிழங்கள் தானே?
இளைஞனாய் நாம் கிழித்தது என்ன?

அருகாமையில் பெண்டிரை நாசம் செய்தான் -
கண், மூக்கு, வாய் பொத்தி காந்திவழி நடந்தோம்!!

மக்கள் தொகையை மிஞ்சும் ஊழல் செய்தான் -
குறுஞ்செய்தியில் போராடினோம்!

இளைஞராய் நாம் இந்நாட்டிற்கு செய்ததென்ன?
சிறு கல் கூட நகர்த்தியது கிடையாதே நாம்?

இருந்தும் இறந்தே கிடக்கின்றோம் நாம்!

நாம் சோற்றில் கை வைக்க - முகம் தெரியா
எவனோ சேற்றில் கால் வைக்கிறான்!

நாமும் நம் நாடும் வளம்பெற - நாம்
அரசியலில் தலையிடுவதில் தவறேது?

இளைஞனே! பங்கேற்போம் அரசியலில்!
மாறுவோம்! மாற்றுவோம்!

இந்தியாவின் இரண்டாம் சுதந்திர போராட்டம்!
இந்தியன், இந்தியனை எதிர்த்து நடத்தும் போராட்டம்!
அரசியல் அக்கிரமங்களை அழித்திடும் போராட்டம்!
பங்கு கொள் இளைஞா!
மன்றாடி  கேட்கிறேன்!

1 comment:

  1. நல்ல கவிதை...

    ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் போராடுவதில்லை என்று சொல்கிறீர்கள்!! இன்று பல ஊழல்களை RTI மூலம் வெளிகொணர்ந்தவர்கள் யார் என்றூ நினைக்கிறீர்கள்?


    //ஒரு இளைஞன் கூடவா கிடைக்கவில்லை இவர்கட்க்கு?//
    இளைஞர்கள் வந்தால் அவர்கள் பிழைப்பு என்னாவது?

    ReplyDelete