Thursday, April 19, 2012

அம்மா

ஒன்றும் தெரியாதவள் என்ற பட்டத்துக்கு
சொந்தக்காரி!
நான் கொடுத்த தொல்லைகளால் தினமும்
நொந்தமனதுக்காரி!

நன்றாகத்தான் வளர்த்தால் அவள் எனை -
கோபம்கொண்டு திரிந்தேன் அதுவென் வினை!

இரு 15 மாதங்கள் பால் ஊட்டினாள் - பதிலுக்கு
இரக்கமின்றி கை-கால் நீட்டினேன்!

உண்ணாமல் உறங்காமல் எனை காத்தாய் - உண்மை
உணராமல் உனை இகழ்ந்தேன்!

நான் எதை கேட்டாலும் கொடுத்தவள் - இன்று நான்
பேசுவதை கேட்க முடியாமல் தவிக்கிறாள்!

எனை கண்ணில் வைத்து பார்த்துகொண்டவள் -
கண் பார்வை குறைந்து நிற்கிறாள்!

அருகில் இருக்கும் போது உன் அருமை உணரவில்லை - உன் அருமை
உணர்கிறேன், நெருங்க முடியவில்லை!

எனை சுமந்தாய் அம்மா இரண்டைந்து மாதம் - சுமக்க
துடிக்கிறேன் அம்மா உன் அடிப்பாதம்!

சூல் கொள்கிறேன் கொண்ட கோபம் குறைக்க -
நான் செய்த பாபம் துடைக்க!

நீ அனுபவித்தது ஏதும் இல்லை - இனி
அந்த குறை உனக்கு தேவை இல்லை!

ஏங்குகிறேன் அம்மா உனை காண -
உந்தன் மகிழ்ச்சி காண!


- பொன்னம்மாள் மகன்!

Tuesday, April 17, 2012

வாழ்க்கை

காலை குளு-தென்றல் கொண்டு வரும்
கச்சேரியின் கானம் - காகத்தின் கவியோசை!
ரசித்துப்பார் - வாழ்வின் ருசி புரியும்!

பொன்-மா-மகன்!

நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டால் வாழ்வில் அருமை இல்லை!
கிடைத்ததை விரும்பிப்பார் - வாழ்க்கையை அமைதியாய் உணர்வாய்!

பேருந்து-பயணம்

நிலா மூடும் மேகமும் - தட்டி விட்டு
ஓடும் நிலவும் !
விளையாடும் நேரத்தில் பேருந்தில் பயணம்!

மனக்கவலைகளை மறப்பதற்கும்
இன்பக்கலவைகளில் மிதப்பதற்கும்!
பேர்-உந்துதல் தரும் தருணம்!

தனியாகத்தான் பயணம் செய்ய வந்தேன் - இப்போது
என்னோடு இருவர்!
ஒன்று வான் நிலா! மற்றொன்று
என் மன நிலா!

-பொன்மாமகன்

நான் - அவள்

முதலாமாண்டு முதல்நாள் முதல் முறை
பார்க்கவே இல்லை நான் - அவளை!
என்று நான் காதலில் விழுந்தேனோ? அன்றே
ஆனேன் அவள் வீட்டு கிணற்றுத் - தவளை!
மூன்று பருவங்கள் கழிந்தன - காதல் அரும்பாமலே
அரும்பிய பின் வளர்ந்தன யாரும் அறியாமலே!
முப்பொழுதும் சண்டையிடுகிறோம் ! ஒன்றை மட்டும் மறக்காமல் -
அவளுக்காய் நான் - எனக்காய் அவள்!

- my love - gist

Sunday, April 15, 2012

பெண் - வானம்




சுட்டெரிக்கும் சூரியனும்!
சூடு தணிக்கும் வெண்ணிலவும்!
ஒழித்துவைக்கும் மேகங்களும்!
குவிந்து கிடக்கும் நட்சத்திரங்களும்!
மழை இருட்டில் ஒளிவீசும் மின்னலும்!
காது கிழிக்கும் இடியோசையும்
வண்ணப்பிறை வானவில்லும்!
வந்து வந்து சென்றாலும் - அப்படியே
இருக்கிறது வானம்!
அதுபோல் தான் பெண்னே நீயும்!
சிறுதவறால் வரும் அவமானம் -
சாதித்தால் அனைத்தும் வெகுமானம்!
சந்தோசம் என்ன?
சில தோஷம் என்ன?
தேகம் என்ன?
சந்தேகம் என்ன?
நம்பிக்கை என்ன?
அவநம்பிக்கை என்ன?
அனைத்துமே உனக்கு துச்சம்!
எதையும் மனதில்  வைக்காதே மிச்சம்!
எப்பொழுதும் முடிவெடுத்திடு நிதானமாய்!  முடிவில் -
கொடுத்திடு உன் அன்பை  தானமாய்!
என்றும் இருப்பாய் பெண்னே வானமாய்!

- பொன்மாமகன்


--கண்டிப்பாய் விமர்சித்திடுங்கள்!