Thursday, April 19, 2012

அம்மா

ஒன்றும் தெரியாதவள் என்ற பட்டத்துக்கு
சொந்தக்காரி!
நான் கொடுத்த தொல்லைகளால் தினமும்
நொந்தமனதுக்காரி!

நன்றாகத்தான் வளர்த்தால் அவள் எனை -
கோபம்கொண்டு திரிந்தேன் அதுவென் வினை!

இரு 15 மாதங்கள் பால் ஊட்டினாள் - பதிலுக்கு
இரக்கமின்றி கை-கால் நீட்டினேன்!

உண்ணாமல் உறங்காமல் எனை காத்தாய் - உண்மை
உணராமல் உனை இகழ்ந்தேன்!

நான் எதை கேட்டாலும் கொடுத்தவள் - இன்று நான்
பேசுவதை கேட்க முடியாமல் தவிக்கிறாள்!

எனை கண்ணில் வைத்து பார்த்துகொண்டவள் -
கண் பார்வை குறைந்து நிற்கிறாள்!

அருகில் இருக்கும் போது உன் அருமை உணரவில்லை - உன் அருமை
உணர்கிறேன், நெருங்க முடியவில்லை!

எனை சுமந்தாய் அம்மா இரண்டைந்து மாதம் - சுமக்க
துடிக்கிறேன் அம்மா உன் அடிப்பாதம்!

சூல் கொள்கிறேன் கொண்ட கோபம் குறைக்க -
நான் செய்த பாபம் துடைக்க!

நீ அனுபவித்தது ஏதும் இல்லை - இனி
அந்த குறை உனக்கு தேவை இல்லை!

ஏங்குகிறேன் அம்மா உனை காண -
உந்தன் மகிழ்ச்சி காண!


- பொன்னம்மாள் மகன்!

1 comment:

  1. ஆகா.. அருமையான கவிதை..

    அருகில் இருக்கும் போது நமக்கு அருமை தெரிவதில்லை என்பது உண்மை தான்!

    //எனை சுமந்தாய் அம்மா இரண்டைந்து மாதம் - சுமக்க
    துடிக்கிறேன் அம்மா உன் அடிப்பாதம்! //

    என்னைப் பாதித்த வரிகள்!

    ReplyDelete