Sunday, May 20, 2012

அம்மா - 2

ஏடு எடுத்தேன்!
உன்னை கவியாய் தீட்டிட!
ஆனால் எதை வரைந்திட?
உன் அன்பையா?
உன் பொறுமையையா?
உன் சாமர்த்தியத்தையா?
தோற்கின்ற போதெல்லாம் அழுது கொண்டிருந்தேன்!
உன் அன்பின் ஆக்கம் தாம் - எனை மீண்டும் முயற்சிக்க வைத்தது!
சிறுவயதில் சிறுபிள்ளைதனமாய் சீரிக்கொன்டிருந்தேன்!
உன் பொறுமையெனும் உளிதான் எனை சிறப்பாய் செதுக்கியது!
சோதனைகள் சூளும் போது சோர்வுற்றுறிறுந்தேன்!
உன் சாமர்த்திய சாணக்கியத்தனம் தான் - எனை சாதனை புரிய வைத்தது!
என் எல்லா 19 வருடத்திலும் - நீ தான்
என் எல்லாமும்!
ஒரு வருட காலம் எனை சுமந்தாய் - உனக்குள்ளே!
நானும் உன்னை சுமப்பேன் அம்மா - இனி
பல வருட காலம்!
சுமையாய் அல்ல - சுகமாய்!
உயிர்தந்து! உடல்தந்து! பின்
உதிரமும் தந்தாய்!
எதை தரப்போகிறேன் உனக்கு??
தாயே வேண்டுகிறேன் இறைவனிடம் - மறுபிறப்பில்
என் தாய் உனக்கு - தாயாக வேண்டுமென்று!



1 comment:

  1. அருமையாக இருக்கிறது....

    அன்பும், பொறுமையும் கலந்தவள் தான் அம்மா என்றே கேள்விபட்டிருக்கிறேன். நீங்கள் சாமர்த்தியத்தையும் சேர்த்து இருக்கீங்க!!

    //ஒரு வருட காலம் எனை சுமந்தாய் - உனக்குள்ளே!
    நானும் உன்னை சுமப்பேன் அம்மா - இனி
    பல வருட காலம்!
    சுமையாய் அல்ல - சுகமாய்!//

    சுமையாய் நினைக்காத உங்களைப் போன்றவரை ஈன்றதற்கு உங்கள் அம்மா பெருமை கொள்ள வேண்டும்!

    வாழ்த்துகள்!!

    ReplyDelete