நடக்கவே இல்லை - ஆனால்
கால்கள் வலிக்கிறது!
பொதி ஏதும் சுமக்கவில்லை - ஆனால்
பாரமாய் இருக்கிறது!
எல்லோரும் இருக்கிறார்கள் - மனம்விட்டு
பேசத்தான் ஆள் இல்லை!
மூன்று வேளைச் சாப்பாடும் இருக்கிறது -
பசிக்கத்தான் இல்லை!
அடித்த வெயிலோ என்னவோ -
என்னிடமெல்லாம் வறட்சி!
முளைப்பாரி எடுத்தும்
பெய்யாத மழை!
காக்காய் பறந்தாலோ,
விளக்கு எறிந்தாலோ,
SPBயின் தெம்மாங்கு கேட்டாலோ,
நீயா நானா பார்த்தாலோ - என்
கண்ணில் மட்டும் எட்டிப்பார்க்கும்!
துக்கம் துனையிருப்பதாலோ - என்னவோ,
தூக்கம் கோவித்துகொண்டு விட்டது!
சுயம் இழந்து - சுரனை இழந்து
மனம் இழந்து - மானம் இழந்து
உறுதியிழந்து - ஊக்கமிழந்து
பிடியிழந்து
இடிவிழுந்து
சாறிழந்த வாழ்க்கை!
ஒன்று மட்டும் வாடிக்கை!
அது-
பஞ்சுப்பொதி ஒன்று
என் மடிப்பரப்பை நிரப்பி
ஆலோலம் பாடி
முத்துச் சிரிப்புதிர்த்து
செல்லம் கொஞ்சி
கதைக் கேட்டு
கதைச் சொல்லி
கன்னம்தொட்டு
முத்தம்மிட்டு
கண்ணயர்ந்து
துயில் கொன்டு -
என் இறுக்கம் தளர்த்தும்
என் கடுமை துரத்தும்
சாந்தப்படுத்தும்
ஒளிக்கீற்று!
அவளே மா!
அவளே மாதுரம்!
அவளே மாதுரத்தி!